TNPSC Thervupettagam

நீரிழிவு சார் ​​விழித்திரை நோய்க்கான AI அடிப்படையிலான பரிசோதனைத் திட்டம்

December 20 , 2025 14 hrs 0 min 20 0
  • இந்தியா தனது முதல் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த சமூகப் பரிசோதனை திட்டத்தை புது டெல்லியில் தொடங்கியது.
  • இந்தத் திட்டம், விழித்திரை படங்களை தானாகச் சரிபார்த்து, வகைப்படுத்தி, வரிசைப் படுத்த, AIIMS நிறுவனத்தின் RPC மையத்தினால் (டாக்டர் இராஜேந்திர பிரசாத் கண் அறிவியல் மையம்) உருவாக்கப்பட்ட MadhuNetrAI எனும் இணைய அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு அமைப்பினைப் பயன்படுத்துகிறது.
  • இந்தச் சோதனைத் திட்டம் ஆனது, நகரங்கள், கிராமங்கள், மலைப் பகுதிகள், கடலோர மற்றும் தொலைதூரப் பகுதிகளை உள்ளடக்கும் வகையில் புனா, மும்பை, பெங்களூரு, தர்மசாலா, கயா, ஜோர்ஹாட் மற்றும் கொச்சி ஆகிய ஏழு இடங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
  • நீரிழிவு சார் விழித்திரை நோய்ப் பாதிப்புள்ள நோயாளிகள் முறையான நீரிழிவு சிகிச்சைக்காக அனுப்பப்படுகிறார்கள், மேலும் கடுமையான பாதிப்புள்ளவர்கள் மாவட்ட மருத்துவமனைகளில் கண் நிபுணர்களிடம் சிகிச்சை பெற பரிந்துரைக்கப் படுகின்றனர்.
  • இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் நோய்களை மேலாண்மை செய்வதில் செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்துவதற்கான ஒரு மாதிரியாக உருவாகி செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்